முகப்பு
செய்திகள்

அம்மாவாகப் போகிறேன்: பிரபல வீராங்கனை நெகிழ்ச்சி!

மற்றவர்களிடம் அவர் என் அம்மா என்று சொல்லப்போவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Updated On : 12 ஜனவரி 2023, 11:31 am IST
பகிர்:

விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதால் இந்த வருடம் எந்தப் போட்டிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜப்பானைச் சேர்ந்த பிரபல வீராங்கனை ஒசாகா அறிவித்துள்ளார்.

25 வயது ஒசாகா செப்டம்பருக்குப் பிறகு எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை. 2023 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தார். 

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் கார்டே டன்ஸ்டனை 2019 முதல் காதலித்து வருகிறார் ஒசாகா. இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்க்கிறார்கள். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒசாகா கூறியதாவது:

Advertisement

Advertisement

எதிர்காலத்தில் நான் சாதிக்க நிறைய உள்ளது என்று தெரியும். என் குழந்தை என் ஆட்டங்களைப் பார்ப்பதையும் மற்றவர்களிடம் அவர் என் அம்மா என்று சொல்லப்போவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 2023 எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும் வருடமாக இருக்கப் போகிறது. 2024 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அனைவரையும் சந்திக்கிறேன். குறிப்பு - வாழ்க்கையில் சரியான பாதை என்று எதுவுமில்லை. ஆனால் நல்ல எண்ணங்களுடன் இருந்தால் உங்களுக்கான வழியைக் கண்டடைவீர்கள் என்று கூறியுள்ளார். 

நெ.1 வீராங்கனையாக இருந்த ஒசாகா தரவரிசையில் தற்போது 47-வது இடத்தில் உள்ளார். நான்கு முறை ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 2022-ம் ஆண்டில் அதிக வருமானம (ரூ. 417 கோடி) ஈட்டிய வீராங்கனை என ஒசாகாவை ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.