செய்திகள்

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி?: புதிய திட்டத்துடன் பிரபல ஆஸி. வீரர்

ஒரு செஸ் ஆட்டம் போல எங்களுடைய மோதல் இருக்கப்போகிறது. இதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார். 

DIN

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பற்றியும் அஸ்வினை எதிர்கொள்வது பற்றியும் பிரபல ஆஸி. பேட்டர் மார்னஸ் லபுஷேன் கூறியதாவது:

கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரிலிருந்து அஸ்வினுக்கு எதிராக எப்படி விளையாடுவது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அஸ்வினைப் பற்றி கேள்விப்பட்டதை வைத்தும் அவர் எனக்குப் பந்துவீசியதை வைத்தும் என்னுடைய ஆட்டமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளேன். அஸ்வினின் சில உத்திகளை வீழ்த்தும் விதத்தில் என்னுடைய ஆட்டத்தைச் சரிப்படுத்தியுள்ளேன். ஒரு செஸ் ஆட்டம் போல எங்களுடைய மோதல் இருக்கப்போகிறது. இதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார். 

புகழ்பெற்ற 2020-21 டெஸ்ட் தொடரில் லபுஷேனின் விக்கெட்டுகளை ஆறு இன்னிங்ஸ்களில் இருமுறை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT