முகப்பு
செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல்!

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் 23 வயது ஷுப்மன் கில். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் 23 வயது ஷுப்மன் கில். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

122 பந்துகளில் 150 ரன்களை எடுத்த ஷுப்மன் கில், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 145 பந்துகளில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்தார். 182 ரன்களில் இருந்தபோது தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து 200 ரன்களை எட்டினார். கடைசி ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடித்தார் கில். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இதன்மூலம் இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் கில். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த இந்திய வீரர்கள்

ரோஹித் சர்மா - 3
ஷுப்மன் கில் - 1
சச்சின் டெண்டுல்கர் - 1
சேவாக் - 1
இஷான் கிஷன் - 1

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

ரோஹித் சர்மா  - 264 
சேவாக் - 219 
இஷான் கிஷன் - 210 
ரோஹித் சர்மா - 209
ஷுப்மன் கில் - 208
ரோஹித் சர்மா - 208 
சச்சின் டெண்டுல்கர் - 200

முழு கட்டுரையைப் படிக்க →