செய்திகள்

ஆஸி.க்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவாரா?: ரோஹித் சர்மா பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டது. மும்பையில் பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது தான் பும்ராவால் சர்வதேச ஆட்டத்தில் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது தற்போது சாத்தியமில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அணியில் இருந்து அவர் விலகினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் பும்ரா சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் பும்ராவின் நிலை பற்றி இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

பும்ரா பற்றி தற்போது உறுதியாக எனக்குத் தெரியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் நிச்சயம் விளையாட மாட்டார். நான் எதிர்பார்க்கிறேன், எதிர்பார்ப்பு என்பதை விடவும் கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன். அதேசமயம் அவரை மீண்டும் விளையாடவைக்க நாம் அவசரம் காண்பிக்கக் கூடாது. முதுகு வலி தொடர்பான காயங்கள் எப்போதும் ஆபத்தானவை. இதற்குப் பிறகு இன்னும் பல போட்டிகள் உள்ளன. அவரைக் கண்காணித்து முடிவெடுப்போம். மருத்துவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT