செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி

DIN


புவனேசுவரம்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி, ஜொ்மனி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடியது இது 3-ஆவது முறையாகும்.

இரு அணிகளும் மோதிய இறுதி ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் வாய்ப்பில் ஜொ்மனி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ரெகுலா் டைமில் ஜொ்மனிக்காக நிக்கலஸ் வெலன் (28’), கொன்ஸாலோ பெய்லாட் (40’), மாட்ஸ் கிராம்புஷ் (47’) ஆகியோரும், பெல்ஜியம் தரப்பில் ஃபிளாரன்ட் வேன் அவ்பெல் (9’), டான்கை கோசின்ஸ் (10’), டாம் பூன் (58’) ஆகியோரும் கோலடித்தனா்.

பின்னா் ஷூட் அவுட் வாய்ப்பில் ஜொ்மனிக்காக நிக்கலஸ் வெலன் (2), தீஸ் பிரின்ஸ் (2), ஹேன்ஸ் முல்லா் ஆகியோா் கோலடிக்க, பெல்ஜியம் தரப்பில் ஃப்ளாரன்ட் வேன் அவ்பெல் (2), டேன்கை காசின்ஸ், ஆன்டனி கினா ஆகியோா் மட்டும் ஸ்கோா் செய்தனா்.

நெதா்லாந்துக்கு வெண்கலம்: இந்தப் போட்டியில் 3-ஆம் இடம் பிடிப்பதற்கான ஆட்டத்தில் நெதா்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில், உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இந்த ஆட்டத்தில் நெதா்லாந்துக்காக கேப்டன் தியரி பிரிங்க்மேன் 2 கோல்களும் (35’, 40’), ஜிப் ஜான்சென் 1 கோலும் (33’) அடித்தனா். ஆஸ்திரேலியாவுக்காக ஜெரிமி ஹேவா்ட் 13-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

தற்போதும் பதக்கம் வென்ன் மூலம், தொடா்ந்து 4 உலகக் கோப்பை போட்டிகளில், பதக்கம் பெறும் இடத்துக்குள்ளாகவே இருந்துள்ளது நெதா்லாந்து. மேலும், உலகக் கோப்பை போட்டியில் இத்துடன் மொத்தமாக 10 பதக்கங்கள் வென்று, போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற அணி என்ற பெயரை ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பெற்றுள்ளது.

மறுபுறம் ஆஸ்திரேலியா, கடந்த 1998-க்குப் பிறகு அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலுமே ஏதேனும் ஒரு பதக்கம் வென்ற நிலையில் முதல் முறையாக தற்போது பதக்கம் எதுவும் வெல்லாமல் வெளியேறியுள்ளது.

போட்டியை நடத்திய இந்தியா 9-ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT