மில்லர் (கோப்புப் படம்) 
செய்திகள்

உலக சாம்பியனை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய தெ.ஆ. அணி!

உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

DIN


உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஒருநாள் ஆட்டமும் புளூம்ஃபாண்டேனில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80, மொயீன் அலி 51, பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்கள். இலக்கை விரட்டியபோது தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள். கேப்டன் பவுமா 102 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 49 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியைக் கரை சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.    

3-வது ஒருநாள் ஆட்டம் புதன் அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT