செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த டிராவிஸ் ஹெட்!

DIN

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை நிறைவு செய்தார். ஆஷஸ் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 74 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். மிட்செல் மார்ஷ் உடன் இணைந்து அவர் அமைத்த 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணிக்கு உதவியாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஹெட் 112 பந்துகளில் 77  ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவர் அடித்த 77 ரன்களால் ஆஸ்திரேலிய அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 111 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிஸ் ஹெட் 5,065 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 42.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 76.55 ஆக உள்ளது. அவர் 9 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 175 ஆகும்.

டெஸ்ட் போட்டிகள் டிராவிஸ் ஹெட்டுக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,808 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 46.80 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 64.08 ஆக உள்ளது. 65 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஹெட் 3 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 175 ஆகும்.

ஆஸ்திரேலிய அணிக்காக 54 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 40.68 என்ற சராசரியுடன் 1,912 ரன்கள் அவர் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 96.81 ஆக உள்ளது. 3 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 152 ஆகும்.

டி20 போட்டிகளை பொறுத்தவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெட் 345 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 133.20  ஆக உள்ளது. டி20 அவரது அதிகபட்ச ஸ்கோர் 48 ஆகும். 

இந்த ஆண்டில் இதுவரை 11 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 841 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசியில் ஜி.கே.ஹைபா் மாா்க்கெட் இன்று திறப்பு

அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் நகா்வு செய்யப்பட கோரிக்கை

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கடையநல்லூா் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

ஆலங்குளத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT