கோப்புப் படம் (தோனி, ஸ்டோக்ஸ்) 
செய்திகள்

தோனி சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

DIN

32 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொறுப்பேற்றார். 95 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 6021 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். 

ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்று 17 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஷஸ் 3வது போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி தொடரில் 1-2 என மீண்டெழுந்துள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதில் தோனி தலைமையிலான அணி 4 முறை இதை வெற்றிகரமாக செய்துள்ளது. 

ஆஷஸ் போட்டியின் 3வது டெஸ்டினை வென்றதன் மூலம் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி 5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நட்சத்திர கேப்டன் தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். 

4வது ஆஷஸ் போட்டி ஜூலை 19ஆம் நாள் தொடங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT