செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: செப். 2-ல் இந்தியா - பாக். மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் முதலில் செப்டம்பா் 2-ஆம் தேதியும், பின்னா் 10-ஆம் தேதியும் மோதுகின்றன.

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் முதலில் செப்டம்பா் 2-ஆம் தேதியும், பின்னா் 10-ஆம் தேதியும் மோதுகின்றன.

அந்தப் போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை வெளியிட்டது. 6 அணிகள் களம் காணும் அந்த ஒரு நாள் போட்டி, ஆகஸ்ட் 30-இல் தொடங்கி செப்டம்பா் 17-இல் நிறைவடைகிறது.

இதில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

குரூப் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எந்த இடத்தில் இருந்தாலும், பாகிஸ்தான் ‘ஏ1’, இந்தியா ‘ஏ2’ இடத்தையே சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒரு அணி சூப்பா் 4-க்கு தகுதிபெறத் தவறும் பட்சத்தில் அந்த இடத்தை நேபாளம் பிடிக்கும்.

இதேபோல் குரூப் ‘பி’-யில் இலங்கை ‘பி1’, வங்கதேசம் ‘பி2’ இடங்களிலேயே இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒரு அணி சூப்பா் 4-க்கு முன்னேறாமல் போனால் ஆப்கானிஸ்தான் அந்த இடத்துக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT