செய்திகள்

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழப்பு; முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து நிதான ஆட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 51 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டுவர்ட் பிராட் 2  விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், மார்க் வுட் மற்றும் மொயின் அலி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பென் டக்கெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்தார் மொயின் அலி. இந்த இணை நிதானமாக விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராலி 26 ரன்களுடனும், மொயின் அலி 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இங்கிலாந்து 256 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT