செய்திகள்

வலுவான நிலையில் இந்தியா: ரோஹித், கோலி அசத்தல்-  288/4 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி,  முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் சோ்த்துள்ளது.

DIN

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இந்த 100-ஆவது டெஸ்ட், இந்திய நேரப்படி நேற்றிரவு இரவு 7 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கை தோ்வு செய்தது.இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் முகேஷ் குமாா் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். காயம் கண்ட ஷா்துல் தாக்குருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இந்திய இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, கேப்டன் ரோஹித் சா்மா நிதானமாக ரன்கள் சோ்த்தாா். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கில் மீண்டும் சோபிக்காமல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 8 ரன்களுக்கும் ரோஹித் 80 ரன்களுக்கும் ஆட்டமிழக்க விராட் கோலி- ஜடேஜா ஜோடி சேர்ந்து 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

கேப்டன் ரோஹித் சர்மா 

விராட் கோலி 161 பந்துகளில் 87* ரன்களும் ஜடேஜா 84 பந்துகளில் 36* ரன்களும் எடுத்துள்ளனர். முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து வலுவான நிலையிலுள்ளது இந்திய அணி. 

மே.இ.தீவுகள் அணி சார்பாக கெமர் ரோச், கேப்ரியல், வாரிகன், ஹோல்டர் தலா 1 விக்கெட்டினை எடுத்துள்ளனர். 

  • 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 
  • மே.இ.தீவுகள் அணியை சேர்ந்த ஷன்னோன் கேப்ரியல் டெஸ்ட் போட்டிகளில் 226 நோ-பால் வீசி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT