செய்திகள்

க்ளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

DIN

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.  

ஆஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்தார் பிரபல ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். 2022ஆம் வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்தியப் பெண்ணை மணந்த 2-வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. 

இந்நிலையில் கற்பமாக உள்ள மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைக்காப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வினி மேக்ஸ்வெல்.

ரசிகர்கள், “தமிழ் பொண்ணு” என்றும் “அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பேச்சாளருக்கான இலக்கணத்தை வகுத்தவா் ஜீவா: எழுத்தாளா் த.ஸ்டாலின் குணசேகரன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT