படம்: ட்விட்டர் | பும்ரா 
செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: பும்ரா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.  

இந்தியா தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20  போட்டிகளில் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. அதன்பின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னமே தகவல் வெளியான நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் துணைக் கேப்டனாக பதவி வகித்துள்ளார். 

இந்திய அணி: ஜஸ்ப்ரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, ஷாபாஸ் அஹமது, ரவி பிஸ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷதீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான். 

இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகஸ்ட் 18,20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT