செய்திகள்

ஐசிசியின் அனைத்து வடிவ கிரிக்கெட் கோப்பையை வென்றவர்கள்: ஐவருமே ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 வீரர்கள் மட்டுமே ஐசிசியின் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் கோப்பையை வென்றவர்களாக சாதனை படைத்துள்ளனர். 

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட் கோப்பைகளை வென்றுள்ள முதல் நாடாக சாதனை படைத்துள்ளது. 

ஒருநாள் உலகக் கோப்பையை 1987, 1999, 2003, 2007, 2015 ஆண்டிலும், டி20 உலகக் கோப்பையை 2021ஆவது ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை 2023லும் பெற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

மேலும் அனைத்து வகை சாம்பியன் பட்டியல்களில் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்துள்ளார்கள். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் என 5 பேர்கள் இந்த 3 விதமான கோப்பையை வென்ற அணியில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2015 உலகக் கோப்பை அணியிலிருந்து இந்த ஐவரும் 3 விதமான கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐசிசி பகிர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT