செய்திகள்

சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?: தேர்வுக் குழுவை விளாசும் கவாஸ்கர்! 

ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாதது ஏனென சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது. இந்திய பேட்டர்கள் சரியாக விளையாடாததே காரணம். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டெஸ்ட் போட்டிக்கு இந்திய  வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் புஜாரா இல்லை. ஜெய்ஸ்வால், ருதுராஜ் இடம் பெற்றிருந்தார்கள். 

மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடா்கள், வரும் ஜூலை 12-ஆம் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் அணி: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ஸ்ரீகா் பரத் (வி.கீ.), இஷான் கிஷண் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஸா் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமாா், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

சர்ஃபராஸ் கான் 2021-22 ரஞ்சிக் கோப்பையில் 982 ரன்கள் எடுத்திருந்தார். 2023இல் 9 இன்னிங்ஸில் 556 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.  

இந்நிலையில் முன்னாள் கேப்டனும் வீரருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது: 

கடந்த 3 சீசன்களாக சராசரி 100க்கும் மேலாக விளையாடி வருகிறார் சர்ஃபராஸ் கான். இந்திய அணியில் தேர்வாக வேறென்ன செய்ய வேண்டும். 11 பேர் கொண்ட அணியில்கூட சர்ஃபராஸ் இடம் பெறவில்லை. அவரை அணியில் சேர்த்துக்கொண்டு அவரது ஆட்டம் கவனிக்கப்படுகிறது என்று சொல்லுங்கள் இல்லையெனில் ரஞ்சி விளையாடுவதை நிறுத்த சொல்லுங்கள். ஐபிஎல் மட்டுமே விளையாடினால்போதும் டெஸ்ட் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT