முகப்பு
செய்திகள்

மகளிர் ஆஷஸ்: கார்டனர் 8 விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி! 

மகளிர் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

ஆடவா் ஆஷஸ் தொடா் 5 ஆட்டங்களுடன் நடைபெறும் நிலையில், மகளிா் ஆஷஸ் கிரிக்கெட் ஒரே டெஸ்ட்டாக நடைபெற்றது. அந்த டெஸ்ட் நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. 

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 463 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. 257 ரன்கள் எடுத்தது. aடுத்து ஆடிய இங்கிலாந்து அணி ஐந்தாம் நாளில் 178 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது.  

ஆஸி. அணி ஆஷ்லி கார்டனர் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்

ஆஸி. அணி சார்பில் ஆஷ்லி கார்டனர் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவருக்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்படது.

இங்கிலாந்து அணியில் டேனியலி யாட் மட்டுமே 54 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →