செய்திகள்

உலகக் கோப்பை வெற்றி: தங்க ஐபோன்களை சக வீரர்களுக்குப் பரிசளிக்கும் மெஸ்ஸி!

உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்லத் தனக்கு உதவிய ஆர்ஜென்டீனா அணி வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு...

DIN

உலகக் கோப்பையை வெல்லத் தனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஆர்ஜென்டீனா அணியைச் சேர்ந்த 35 பேருக்குத் தங்கத்திலான ஐபோன்களைப் பரிசளிக்கவுள்ளார் கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

இந்நிலையில் உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்லத் தனக்கு உதவிய ஆர்ஜென்டீனா அணி வீரர்கள், பயிற்சியாளர்களுக்குப் புதுமையான முறையில் பரிசளிக்க முடிவு செய்துள்ளார் மெஸ்ஸி. இதையடுத்து 35 நபர்களுக்குப் பரிசளிப்பதற்காகத் தங்கத்திலான ஐபோன் 14 வகை செல்பேசிகளை ஆர்டர் செய்துள்ளார். இதற்கான செலவு கிட்டத்தட்ட ரூ. 1.73 கோடி என அறியப்படுகிறது. 

மெஸ்ஸி பரிசளிக்கும் தங்கத்திலான ஐபோனில் குறிப்பிட்ட வீரரின் பெயர், சீருடை எண், ஆர்ஜென்டீனா அணியின் இலச்சினை ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஐடிசைன் கோல்ட் என்கிற நிறுவனம் மெஸ்ஸி விரும்பிய ஐபோன்களைப் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ஆர்ஜென்டீனா அணி வீரர்களுக்குச் சிறப்பான முறையில் பரிசளிக்க வேண்டும் என மெஸ்ஸி விரும்பியபோது ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பென், இதற்கான யோசனையைக் கூறியுள்ளார். இதையடுத்து, தங்கத்திலான 35 ஐபோன்களை மெஸ்ஸியிடம் வழங்கும் புகைப்படங்களை ஐடிசைன் கோல்ட் நிறுவனம் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT