முகப்பு
செய்திகள்

தடுமாறிவரும் ஹைதராபாத் அணி! 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் 9வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. லக்னௌ வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும். ஹைதராபாத் வெற்றி பெற்றால் 6வது இடத்திற்கு முன்னேறலாம். 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. லக்னௌ அணியில் 2 மாற்றங்களும், ஹைதராபாத் அணியில் 1 மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 

10 ஓவர் முடிவில் 95/3 ரன்கள் எடுத்துள்ளது ஹைதராபாத். முதல் 3 வீரர்கள் விக்கெட்டை இழந்துள்ளனர். அதிரடியாக விளையாடிய அனுமோல்ப்ரீத் சிங் 36 ரன்களும் ராகுல் த்ரிப்பாதி 20 ரன்களிலும் அபிசேக் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது அதிரடியாக மார்கரம் (22), கிளாசென் (6)  விளையாடி வருகின்றனர். 

இந்தப் போட்டியில் ஹைதராபாத் தோல்வியுற்றால் ப்ளே-ஆஃப்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →