விராட் கோலி (கோப்புப் படம்) 
செய்திகள்

அடுத்த தலைமுறையை வழிநடத்து: கோலி பாராட்டியது யாரைத் தெரியுமா?

அடுத்த தலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டும் என இளம் கிரிக்கெட் வீரரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். 

DIN

அடுத்த தலைமுறையை வழிநடத்திச் செல்ல வேண்டும் என இளம் கிரிக்கெட் வீரரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். 

குஜராத் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான நேற்றைய (மே 15) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில் அடித்த சதம் முக்கியப் பங்காற்றியது. 

அதில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை ஷுப்மன் குவித்தார். 

இந்நிலையில் இளம் வீரர்களை அவ்வபோது ஊக்குவித்து வரும் விராட் கோலி, ஷுப்மன் கில்லையும் பாராட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். 

அதில், திறமை இருக்கிறது எனில் அங்கு ஷுப்மன் கில் இருக்கிறான் என்று பொருள். அடுத்த தலைமுறையை வழிநடத்திச்செல். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி, இதற்கு முன்பு சாஹா, ஜெய்ஸ்வால் ஆகியோரையும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT