முகப்பு
செய்திகள்

நியூசிலாந்து அபாரம்: பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு! 

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 401 ரன்கள் குவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

உலகக் கோப்பை லீக் போட்டியின் 35வது ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூ. மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. 

நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். நியூசி. பாக். இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி வாழவா சாவா என்ற நிலையில் மிகவும் எதிரபார்ப்புடன் போட்டி நடைபெற்று வருகின்றன. 

சதமடித்த ரச்சின் ரவீந்திரா

தொடக்க வீரர் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில்லியம்சனும் ரச்சினும் சிறப்பாக விளையாடினார்கள். அசத்தலாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

வில்லியம்சன் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிட்செல் - 29, சாப்மன் - 39, க்ளென் பிலிப்ஸ் - 41, சான்ட்னர் - 26, டாம் லாதம் - 2.    

50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 401/6 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜுனியர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஹசன் அலி, ஹாரிஸ் ரௌப், இப்திகார் தலா 1 விக்கெட்டினை எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments