செய்திகள்

இறுதிப்போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்; இந்திய ஆல்ரவுண்டரின் சகோதரி நம்பிக்கை!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் தங்கை நைனா ஜடேஜா தெரிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் தங்கை நைனா ஜடேஜா தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் தங்கை நைனா ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி சிறந்த அணி. ஆனால், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கம் முதலே தோல்வியே காணாமல் இந்தியா அபாரமாக விளையாடி வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT