செய்திகள்

இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: கோப்பை யாருக்கு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அகமதாபாதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் விராட் கோலி களமிறங்கினார். கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 81 ரன்களுக்கு 3  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

அதன்பின் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன்களை சற்று உயர்த்தினர். நிதானமாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா (9 ரன்கள்), முகமது ஷமி  ( 6 ரன்கள் ), ஜஸ்பிரித் பும்ரா ( 1 ரன்) ஆட்டமிழந்து வெளியேறினர். நிதான ஆட்டத்தைக் கடைபிடித்த கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

241  ரன்கள் எடுத்து 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் புரோமோ ஆரம்பம்! இயக்குநர் இவரா?

டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகும் 5 நட்சத்திர இளம் வீரர்கள்!

மேகாலயத்தில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுப்பு, பலி 27ஆக உயர்வு

NDAவுக்கு உண்மையான தலைமை தில்லிதான்! EPS விமர்சனத்திற்கு அருண்ராஜ் பதில்!

ராஜஸ்தான்: தற்காப்புக்காக சிறுத்தையை கோடரியால் தாக்கிக்கொன்ற விவசாயி

SCROLL FOR NEXT