செய்திகள்

அமைதியில் இந்திய ரசிகர்கள்: சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சொன்னதை செய்து காட்டி வருகிறார். 

DIN

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.  

டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. தற்போது இந்திய அணி  32 ஓவரில் 162 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். மைதானத்தில் இருக்கும் 1,30,000 பார்வையாளர்களும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். நாளைய இறுதிப்போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு” எனக் கூறியிருந்தார். 

ரோகித் ஆட்டமிழந்த பிறகு பவுண்டரிகள் குறைந்து  விட்டது. பின்னர் இந்திய பேட்டர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க மைதானமே அமைதியில் மூழ்கியது. 

விராட் கோலி விக்கெட்டினை கம்மின்ஸ் வீழ்த்திய போது  மைதானமே மயான அமைதியில் மூழ்கியது. இதை பார்க்கும்போது கம்மின்ஸ் சொன்னதை செய்து காட்டிவிட்டதாகவே தெரிகிறது. 

கம்மின்ஸ் 7 ஓவர் வீசி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT