செய்திகள்

அருமையான கேப்டன்சி; பாட் கம்மின்ஸுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்!

ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாதில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இந்த நிலையில்,  ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணி டாஸ் ஜெயித்தபோது பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால், அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக பனிப்பொழிவு இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். பனிப்பொழிவு இருக்கையில் பந்துவீசுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து சாதுரியமாக பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பாட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு தவறான முடிவுகளையும் எடுக்கவில்லை. சரியான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட்டினை எடுத்தார். பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷை அருமையாகப் பயன்படுத்தினார். பாட் கம்மின்ஸ் பந்துவீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர் அணியை வழிநடத்திய விதம் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான பங்களிப்பு என அனைத்துத் துறைகளிலும் அசத்தினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT