தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியா சாதனை!
ஆசிய விளையாட்டு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய நால்வர் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய நால்வர் அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
11 ஆவது நாளான இன்று, ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், அஜ்மல் முஹமது, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய நால்வர் அணி பங்கேற்றது. இதில், 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து இந்திய அணி சாதனை படைத்தது.
இதேபோன்று பெண்கள் பிரிவில் 4x400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்காள் இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத்தந்தனர்.
இந்தியா இதுவரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.