செய்திகள்

ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

DIN

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 11வது நாளான இன்று, ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அவர் 88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நாட்டுக்காக தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஆசிய விளையாட்டு தொடரில் 17 தங்கம், 28 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 76 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT