கோப்புப்படம் 
செய்திகள்

அகமதாபாத்தில் கில்: பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவாரா?

சென்னையிலிருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

DIN

சென்னையிலிருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் முதலாவது போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய தொடக்க வீரர் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை.

தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்காததால், தில்லியில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் கில் பங்கேற்கவில்லை. சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்த இன்று காலை விமானம் மூலம் அகமதாபாத்துக்கு கில் புறப்பட்டுச் சென்றார்.

அகமதாபாத்தில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடவுள்ள நிலையில், கில்லும் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார்.

இதனால், பாகிஸ்தான் போட்டியில் கில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், அவரது உடல் சோர்வு காரணமாக குறைந்தது இன்னும் ஒரு போட்டியிலாவது விளையாடாமல் இருப்பார் என்றே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT