செய்திகள்

மீண்டும் கேன் வில்லியம்சனுக்கு காயம்!

உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் கேன் வில்லியம்சன். 

DIN

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். 

இதனால் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியுமா என கேள்வி எழுந்தது. பின்னர் கடின உழைப்புக்குப் பிறகு நியூசிலாந்தின் 3வது போட்டியில் களமிறங்கினார்.

வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ரன் ஓடும்போது ஃபீல்டிங்கில் இருந்து பந்தினை வீசும்போது அது வில்லியம்சனின் கையில் பட்டது. இருந்தும் சிறிது நேரம் அனிக்காக விளையாடினார். பின்னர் குறைவான ரன்களே தேவைப்பட்டபோது ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 

50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 42.5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

“பெரிய காயமில்லை; காலையில் ஸ்கேன் செய்து பார்க்கப்படும்” என வில்லியம்சன் போட்டி முடிந்தப்பிற்கு பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT