பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கடந்த செவ்வாய் கிழமை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியின்போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது.
கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 32 வயதான இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இதுதான் தூய்மை இந்தியாவா?: ரசிகர்களை விளாசிய நடிகை திவ்யா!
ஏற்கனவே ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடம் இலங்கை மோசமாக தோல்வியுற்றது. ஷனகாவின் கேப்டன்சி கேள்விக்குறியானது. இந்நிலையில் அவருக்குப் பதிலாக சமீகா கருணா ரத்னா அணியில் இடம்பெற்றுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா?: பாக். அணியின் இயக்குநர் கேள்வி!
இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவாரென இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.