செய்திகள்

அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆடம் ஸாம்பா!

அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா இணைந்துள்ளார்.

DIN

அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா இணைந்துள்ளார்.

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சுளார்கள் பட்டியலிலும் அவர் இணைந்தார். 89 போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள்

சாக்லைன் முஸ்தக் - 78 போட்டிகளில் 
ரஷித் கான் - 80 போட்டிகளில் 
அஜந்தா மெண்டிஸ் - 84 போட்டிகளில் 
குல்தீப் யாதவ் - 88 போட்டிகளில் 
இம்ரான் தாஹிர் - 89 போட்டிகளில்
ஆடம் ஸாம்பா - 89 போட்டிகளில் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT