செய்திகள்

தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடி: இங்கிலாந்துக்கு 400 ரன்கள் இலக்கு!

DIN

இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்  போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி-காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். டி-காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வாண்டர் துசென் ஹென்ரிக்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். வாண்டர் துசென் 60  ரன்களும் (8 பவுண்டரிகள்), ஹென்ரிக்ஸ் 85 ரன்களும் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் டேவிட் மில்லர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மார்கரம் மற்றும் ஹென்ரிச் க்ளாசன் ஜோடி சேர்ந்தனர். 

இந்த இணை சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தியது. க்ளாசன் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மார்கரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய க்ளாசன் 61 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட 5-வது சதம் இதுவாகும். க்ளாசனுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மார்கோ ஜேன்சன் அதிரடியாக அரைசதம் கடந்தார். க்ளாசன் 109 ரன்களில்  ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜேன்சன் அதிரடியாக 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத்  மற்றும் கஸ் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT