செய்திகள்

உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் அசாம் கேப்டன் பதவியில் தொடர்வாரா? : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறினால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவி குறித்து முடிவு செய்யப்படும்.

DIN

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறினால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடர் இதுவரை பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியையே தழுவியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி அந்த அணியின் மீதான விமர்சனங்களையும், கேப்டன் பாபர் அசாமின் மீதான விமர்சனங்களையும் அதிகப்படுத்தியது. பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறினால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கிரிக்கெட்டில் வெற்றி மற்றும் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வதில் கேப்டன் பாபர் அசாமுக்கும், அணித் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்குக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி செயல்படும் விதத்தைப் பொறுத்து அணியின் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தற்போது உலகக் கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT