செய்திகள்

அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்: தென்னாப்பிரிக்க வீரர் புகழாரம்! 

பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க  அணி வீரர் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 26-ஆவது ஆட்டம் நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ‘த்ரில்’ வெற்றி கண்டது.  

271 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தெ.ஆ. அணியினர் 4  விக்கெட்டுகள் வரிசையாக சரிந்ததால் கடைசி நேரத்தில் தடுமாற்றம் கண்டது. முடிவில் கேசவ் மஹராஜ் 7, டப்ரைஸ் ஷம்சி 4 ரன்களுடன் அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழி நடத்தினா்.

போட்டி சம பலத்துடன் இருக்கும்போது சென்னை ரசிகர்கள் இரண்டு அணியினருக்கும் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில் அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையானது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என யார் விளையாடினாலும் அனைவருக்கும் ஆதரவு அளிப்பவர்கள் சென்னை ரசிகர்கள். அதனால்தான் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அறிவார்ந்த சென்னை ரசிகர்கள் என பலரும் கூறுவார்கள்.

சமீபத்திய போட்டிகளிலும் பாக். ரசிகர்கள் மற்றும் ஆப்கன் வீரர்கள் இதை நெகிழ்ச்சியாக கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி வீரர் நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் ஷம்சி தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “முதன்முறை சென்னையில் விளையாடுகிறேன். இந்த சிறப்பான போட்டியில் நான் பங்கெடுத்தது    மகிழ்ச்சி. சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள். இரு அணிகளுக்கும் ஆதரவளித்தார்கள். மேலும் இரு அணியிலும் யார் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆதரவளித்தார்கள். நன்றி” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT