முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரஷித் கான்!

நூறு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நான்காவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
பகிர்:

நூறு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நான்காவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பையின் நேற்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விளையாடிய 100-வது ஒருநாள் போட்டியாகும்.

இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 4-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

ஆப்கானிஸ்தான் அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

முகமது நபி - 153 போட்டிகள்
அஸ்கர் ஆஃப்கான் - 114 153 போட்டிகள்
ரஹ்மத் ஷா - 103 153 போட்டிகள்
ரஷித் கான் - 100 போட்டிகள்

முழு கட்டுரையைப் படிக்க →