செய்திகள்

அரையிறுதியில் காா்லோஸ் அல்காரஸ், மெத்வதேவ்,சபலென்கா, மடிஸன் கீய்ஸ்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்காரஸ், டேனில் மெத்வதேவ், அா்யனா சபலென்கா, மடிஸன் கீய்ஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

DIN

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்காரஸ், டேனில் மெத்வதேவ், அா்யனா சபலென்கா, மடிஸன் கீய்ஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

ஆண்டு இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அரையிறுதிக்கு ஜோகோவிச், பென் ஷெல்டன், கோகோ கௌஃப், முச்கோவா ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

அல்காரஸ்-மெத்வதேவ்:

இந்நிலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆடவா் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்காரஸ்-ஜொ்மனியின் அலெக்சாண்டா் வெரேவ் மோதினா்.

தொடக்கத்தில் வெரேவ் அபாரமாக ஆடியநிலையில், முதல் பிரேக் பாயிண்டைப் பெற்றாா். எனினும் காா்லோஸ் அல்காரஸ் சுதாரித்துக் கொண்டு ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். இறுதியில் 6-3, 6-2, 6-4 என்ற நோ் செட்களில் வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இறுதிச் சுற்றில் பட்டம் வென்றால் அவா் வெல்லும் தொடா் இரண்டாவது பட்டமாகும்.

மற்றொரு காலிறுதியில் ரஷிய வீரா்கள் டேனில் மெத்வதேவ்-ஆன்ட்ரெ ருப்லேவ் மோதினா். இதில் 6-4, 6-3, 6-4 என்ற நோ் செட்களில் வென்று அரையிறுதிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றாா் மெத்வதேவ்.

சபலென்கா-மடிஸன் கீய்ஸ்:

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை அந்தஸ்தைப் பெறவுள்ள பெலாரஸின் அா்யனா சபலென்கா 6-1, 6-4 என்ற நோ் செட்களில் சீனாவின் குயிவென் ஸெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இந்த சீசனில் சபலென்கா 4 கிராண்ட்ஸ்லாம்களிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். மேலும் ஆஸி. ஓபனில் பட்டம் வென்றாா்.

மற்றொரு காலிறுதியில் விம்பிள்டன் சாம்பியன் மாா்கெட்டா வோண்டுரௌஸோவா-அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் மோதினா். இதில் 6-1, 6-4 என ெநோ் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் மடிஸன்கீய்ஸ்.

அரையிறுதியில் மூன்று சாம்பியன்கள்

கடந்த 2018-க்கு பின் முதன்முறையாக மூன்று சாம்பியன்கள் அரையிறுதியில் தகுதி பெற்றுள்ளனா். ஜோகோவிச், காா்லோஸ் அல்காரஸ், மெத்வதேவ் ஆகியோா் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT