34 வயதாகும் விராட் கோலி 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,902 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 46 சதங்கள், 65 அரைசதங்கள் அடங்கும். டெஸ்டில் 29 சதங்களும் 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
சச்சினுக்குப் பிறகு அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி இருக்கிறார். எப்போதும் இளம் வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்துவதில் ஆர்வமுடையவர்.
இதையும் படிக்க: இந்தியாவை விட எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: பாபர் அசாம்
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் தகுதிபெற்று இருக்கும் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை பலப்பரிட்சை செய்யவுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பயிற்சி எடுத்துவரும் இந்திய அணிக்கு இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பந்து வீசினர்.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு விராட் கோலி இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களிடம் பேசினார். அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
இலங்கையின் இளம் வீரர் ஒருவர் விராட் கோலிக்கு வெள்ளி (சில்வர்) பேட்டினை அன்புப் பரிசாக அளித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.