செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: மழையால் தாமதம்!

மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

DIN

மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4  போட்டி மழை காரணமாக நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நிறுத்தப்பட்டது.  நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால்  ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால்  ஆட்டம் கூடுதல் நாளான இன்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை நின்றபின் போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து இன்று தொடங்கும். இந்திய அணியின் விராட் கோலி 8 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT