செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்!

DIN

ஆசியக் கோப்பையில் இந்தியா 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஆசியக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இஷான் கிஷன் 23 ரன்களுடனும், ஷுப்மன் கில் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆசியக் கோப்பையில் இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT