படங்கள்: ட்விட்டர் 
செய்திகள்

விராட் கோலி போல பாவனை செய்த இஷான் கிஷன்: வைரல் விடியோ! 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போல இஷான் கிஷன் நடித்து காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன் ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.

இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய எடிஷன்களில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.

இந்திய தரப்பில் முகமது சிராஜ் அசத்தலாக பௌலிங் செய்து 6 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இஷான் கிஷன் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி போல நடந்து காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இஷானின் நடிப்பை விராட் கிண்டல் செய்வதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது. 

அடுத்து இந்திய அணி ஆஸி. அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கடுத்து நேரையாக உலகக் கோப்பை விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT