படம்: இன்ஸ்டாகிராம் | சஞ்சு சாம்சன் 
செய்திகள்

அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வாகாதது குறித்து பதிவிட்டுள்ளார். 

DIN

13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை, ஆசிய போட்டிகள் என எதிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை. 

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.

முதலிரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. 3வது போட்டியில் ரோஹித் தலைமையில் களமிறங்குகிறது. இதில் எந்த அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை. 

ஐது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சஞ்சு சாம்சன் சோகம் கலந்த சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்சன், “இதுதான் நான். இங்கிருந்து நான் முன்னேற நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அதில் தான் பேட்டிங் விளையாடும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “நான் சஞ்சு சாம்சன் நிலையில் இருந்தால் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். பலரும் சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT