செய்திகள்

8 ஓவர்களில் 100 ரன்கள்: சாதனை படைத்த இங்கிலாந்து அணி! 

DIN

அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் இங்கிலாந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

3வது போட்டியில் அயர்லாந்து டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செயதது. இங்கிலாந்து அணியின் பிலிப் சால்ட் முதல் ஓவரிலேயே டி20 கிரிக்கெட் போல அடித்து ஆடினார். 4,4,4,6 என அதிரடியாக தொடங்கினார். முதல் ஓவரிலேயே 19 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி . பிலிப் சால்ட்டுடன் வில் ஜாக்ஸும் சேர்ந்து அதிரடியாக ஆடினார். 

3.3 ஓவர்களில் அரைசதம் கடந்த இங்கிலாந்து அணி 8ஓவருக்கு 100/1 ரன்களை எடுத்தது. இதுதான் இங்கிலாந்தின் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமான சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிலிப் சால்ட் 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  வில் ஜாக்ஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது 20 ஓவர் முடிவில் 176/2 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. பென் டக்கட் 41 ரன்களுடனும் ஜாக் க்ராவ்லி 33 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள் 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இதுதான் இங்கிலாந்தின் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய போட்டியாகும். 

நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக 2015இல் 6.3 ஓவர்களுக்கு 100 ரன்கள் எடுத்ததே இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஒரு அணி 100 ரன்களை கடந்ததாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT