செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி!

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடமும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மித் தனது சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  அதன்பின் களமிறங்கியவர்களில் அலெக்ஸ் கேரி தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 2  விக்கெட்டினையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் வலுவான நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்த்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்குகிறது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிலையே படம் பிடித்தால்.. எமி ஜாக்சன்

700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலைத்துறையின் தக்கார் நியமனம் செல்லும்!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்!

SCROLL FOR NEXT