டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்!
டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: முழு உடல்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருகிறேன். பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்காக ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரை தியாகம் செய்கிறேன். இந்தத் தியாகம் நான் மீண்டும் முழு உடல்தகுதியுடன் சிறப்பான ஆல்ரவுண்டராக எதிர்காலத்தில் விளையாட உதவும் என்றார்.
Advertisement
Advertisement
முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.