காலின் முன்ரோ
காலின் முன்ரோ  படம் | ஐசிசி
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்படும் பிரபல நியூசி. வீரர்?

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக பிரபல நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான காலின் முன்ரோ சர்வதேசப் போட்டியில் விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய முன்ரோ, அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 6-வது இடம் பிடித்தார். கரீபியன் லீக் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள 7-வது வீரராக அவர் உள்ளார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் காலின் முன்ரோ சேர்க்கப்படுவதை கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என அணி தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான சாம் வெல்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: காலின் முன்ரோவிடம் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற காலின் முன்ரோ மறுத்துவிட்டார். இருப்பினும், உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு அவர் ஒரு தெரிவாக இருப்பார் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என்றார்.

நியூசிலாந்து அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள காலின் முன்ரோ 1,724 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT