ஹிகரு நகமுரா, விதித் சந்தோஷ் குஜராத்தி.   FIDE/ X
செய்திகள்

கேண்டிடேட்ஸ் செஸ்: உலகின் 3-ஆம் நிலை வீரரை வீழ்த்திய இந்தியர்!

கனடாவில் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 2ஆம் சுற்றில் விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹிகரு நகமுராவை வென்றார்.

DIN

கனடாவில் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 2ஆம் சுற்றில் விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹிகரு நகமுராவை வென்றார்.

கனடாவில் நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா்களான பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ், வைஷாலி, கோனெரு ஹம்பி ஆகிய 5 பேருமே டிரா செய்தனா்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் நடைபெற்ற 2ஆவது சுற்றில் இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி (25வது நிலை) உடன் உலகின் 3ஆம் நிலை செஸ் வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகரு நகமுரா விளையாடினார்.

இந்தப் போட்டியில் விதித் சந்தோஷ் கருப்பு நிற காய்களுடனும், ஹிகரு நகமுரா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள். விதித் சந்தோஷ் தனது 29ஆவது நகர்த்தலுக்குப் பிறகு ஹிகரு நகமுரா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹிகரு நகமுராவின் சாதனையை தடுத்து நிறுத்தியுள்ளார். கிளாசிக்கல் செஸ் போட்டியில் தொடர்ந்து 47 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத ஹிகரு நகமுரா தற்போது தோல்வியை சந்தித்துள்ளார்.

2ஆம் சுற்று முடிவுகள்:

இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவை மற்றொரு இந்திய வீரரான குகேஷ் வென்றார். ரஷியாவின் இயன் நெபோம்னிஷி பிரான்ஸின் அலிரிஸா ஃபிரௌஸா வென்றார். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா அஜா்பைஜானின் நிஜாத் அபசோவை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

அரசமைப்புச் சட்டப் பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT