ரிஷப் பந்த் படம் | ஐபிஎல்
செய்திகள்

உலகக் கோப்பைக்கான அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இயான் மோர்கன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நான் ரிஷப் பந்த்தை தேர்வு செய்வேன். ஏனென்றால், அவர் அப்படியே பழைய ஃபார்மில் இருக்கிறார். கார் விபத்து ரிஷப் பந்த்தின் ஆட்டத்தில் எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார். இடது கை ஆட்டக்காரராக இருப்பதால், நடுவரிசை ஆட்டக்காரராக ரிஷப் பந்த் அணிக்கு பலம் சேர்ப்பார் என்றார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT