சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு.
சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு. PTI
செய்திகள்

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

DIN

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.

இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவா், அந்த சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இளம் போட்டியாளா் (17 வயது) என்ற புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன்னா், ரஷிய நட்சத்திரமான கேரி கேஸ்பரோவ் 1984-இல் தனது 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. குகேஷ் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்திருக்கிறாா்.

நடப்பாண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியனாக இருக்கும் சீனாவின் டிங் லிரெனுடன் மோதவுள்ளாா் குகேஷ்.

இந்நிலையில் குகேஷ் சென்னை வந்தடைந்தார். குகேஷ் படித்த வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்த குகேஷுக்கு சென்னை மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

“நான் சொந்த மண்ணுக்கு வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சிறப்பான சாதனை. தொடரின் தொடக்கத்தில் இருந்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்; அதிர்ஷ்டமும் எனக்கு சாதகமாக இருந்தது. தற்போது பலரும் செஸ் போட்டியினை கொண்டாடுவதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக அரசு, எனது அப்பா, அம்மா, பயிற்சியாளர், நண்பர்கள், எனது பள்ளி என எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.

குகேஷ் குடும்பத்தினர் அவரைக் கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT