முகப்பு
செய்திகள்

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

பிரபல பாகிஸ்தான் வீராங்கனை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 9:34 PM
பிஸ்மா மரூஃப் - படம் | ஐசிசி
பகிர்:

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான பிஸ்மா மரூஃப் அனைத்து வடிவிலான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான பிஸ்மா மரூஃப் இதுவரை 276 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 6,262 ரன்கள் குவித்துள்ளார். அதில் 33 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் அணிக்காக அவர் 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக அவர் வலம் வருகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் 3,369 ரன்களும், டி20 போட்டிகளில் 2,983 ரன்களும் குவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமையும் அவரைச் சேரும்.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.