முகமது ரிஸ்வான் (கோப்புப்படம்) 
செய்திகள்

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிந்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விலகியுள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிந்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 25) நான்காவது டி20 போட்டி நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் மற்றும் இளம் பேட்ஸ்மேன் இர்ஃபான் கான் இருவரும் உடல்தகுதி காரணமாக விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது முகமது ரிஸ்வான் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். முகமது ரிஸ்வான் குணமடைய 2 - 4 வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

காயம் காரணமாக விலகியுள்ள முகமது ரிஸ்வான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்த இரண்டு தொடர்கள் மூலமாக பாகிஸ்தான் அணி 7 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT