ஜாகீர் கான் (கோப்புப்படம்) 
செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

டி20 உலகக் கோப்பைக்கான தனது விருப்பமான இந்திய அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான தனது விருப்பமான இந்திய அணியை இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார்.

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான தனது விருப்பமான இந்திய அணியை இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜாகீர் கான் ஜியோ சினிமாவில் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார். யஷ் தயாள் நன்றாக பந்துவீசுகிறார். அவர் அந்த இடத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார். அதேபோல முகமது சிராஜும் சிறப்பாக பந்துவீசுகிறார். அவரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய அணிக்கான விக்கெட் கீப்பரை பொருத்தவரையில் ரிஷப் பந்த் மட்டுமே என்னுடைய ஒரே தெரிவாக இருப்பார். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும். இரண்டு விக்கெட் கீப்பர்களை அணியில் சேர்த்து வேகப் பந்துவீச்சாளர்களின் இடத்தை தியாகம் செய்வது சரியாக இருக்காது என்றார்.

டி20 உலக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணி:

பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங்

ஆல்ரவுண்டர்கள்: ஷிவம் துபே, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா

விக்கெட் கீப்பர்: ரிஷப் பந்த்

பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், யஷ் தயாள், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT